Published : 10 Feb 2016 05:51 AM
Last Updated : 10 Feb 2016 05:51 AM

காவல் ஆணையர் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் - போலீஸ் தள்ளுமுள்ளு: கைது செய்யப்பட்டதற்கு மக்கள்நலக் கூட்டணி, பாமக கண்டனம்

கைது செய்து விடுவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் எதிரே மீண்டும் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம், ‘டிசம்பர் 3’ இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட் டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சதவீத இடஒதுக்கீடு, 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்குவது, குறைந்தபட்ச மாத உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை சேப் பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை, காமராஜர் சாலையில் மறியல், விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் என இரவு வரை பல்வேறு போராட்டங் களை நடத்தினர். இதையடுத்து, 1,000 பேரை போலீஸார் கைது செய்து, வேப்பேரி ஈவெகி சம்பத் சாலையில் உள்ள மராட்டிய மண்டல் மண்டபத்தில் வைத்தனர்.  நேற்று காலை விடுவிக்கப்பட்ட அவர்கள், ஈவெகி சம்பத் சாலை யில் காவல் ஆணையர் அலுவல கம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். காவல் இணை ஆணையர் மனோ கரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். ஆனால், கோரிக்கையை அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்று மாற்றுத்திறனா ளிகள் கூறினர். அவர்களை போலீ ஸார் வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தலைமைச் செயலரை சந்தித்துப் பேசுவதற்காக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் சென்றனர்.

இதுபற்றி, ‘டிசம்பர் 3’ இயக்கத் தலைவர் தீபக் கூறும்போது, ‘‘தலைமை செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கோரிக்கைகளை வலியு றுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்’’ என்றார்.

மக்கள்நலக் கூட்டணி கண்டனம்

மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள்நலக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக வைகோ (மதிமுக), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) நேற்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

‘‘போராடும் மாற்றுத்திறனாளி களுடன் பேச்சு நடத்தி தீர்வு காணா மல் தமிழக அரசு அடக்குமுறையை ஏவிவிட்டதோடு ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டிக்கிறோம். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்துக்கு மக்கள்நலக் கூட்டணி துணை நிற்கும்’’ என்று அதில் கூறியுள்ளனர்.

ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாற்றுத்திறனாளிகள் மீது போலீஸார் மனிதாபிமானமற்ற வகையில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தமிழக அரசு இத்தகைய அணுகுமுறையைக் கைவிட்டு மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக் கைகளை நிறை வேற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி வலியுறுத்தல்

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம் 50-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் என்னை சந்தித்து, தாங்கள் படும் துயரங்களை எடுத்துக் கூறினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக போராடி வரும் மாற்றுத் திறனாளிகளை யாரும் வந்து பார்க்கவில்லை. காவல் துறையினர் தாக்கியதாகவும் தெரிவித்தனர்.

சென்னை பூந்தமல்லி பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் உள்ள சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 75 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வில்லை என்றும், இந்த பயிற்சி நிறுவனம் மூடப்பட்டு விட்ட தாகவும் என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளி களின் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதிகூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x