Published : 10 Feb 2016 02:49 PM
Last Updated : 10 Feb 2016 02:49 PM

தென்மாவட்ட வளர்ச்சியை முன்னிறுத்தி தேர்தல் பணி: புதிய தமிழகம் கட்சி தலைவர் திட்டம்

தென்மாவட்ட வளர்ச்சியை முன்னிறுத்தியே தேர்தல் பணி மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் கே.கிருஷ்ணசாமி பேசினார்.

புதிய தமிழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர், களப்பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது.

இதில் அக்கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி பேசியதாவது:

கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகிய துறைகளில் தென்தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் தென்தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் நடைபெறவில்லை. எனவே தென்மாவட்ட வளர்ச்சியை முன்னிறுத்தியே தேர்தல் பணி மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

இந்த ஆட்சியில் ஒவ்வொரு ஜனநாயக அமைப்பையும் தனது துணை அமைப்பாக அதிமுக மாற்றி வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரில் அ.தி.மு.க. அடையாள அட்டை வைத்துள்ள 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி.யில் ஏற்கெனவே பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. தற்போதைய உறுப்பினர் நியமனத்தால் அதிமுகவினரை மட்டுமே அரசுப் பணியில் நியமிக்கும் சூழல் ஏற்படும்.

அதேபோல திறமையற்றவர்கள் பலர் மக்கள் தொடர்பு அலுவலர், உதவி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் தகுதியான கல்வியா ளர்களை மட்டுமே துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், பணம் படைத்தவர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமி க்கப்படுகின்றனர். இதுபோன்ற நிலை மைகள் ஆபத்தான போக்கையே உருவாக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x