Published : 25 Dec 2015 01:41 PM
Last Updated : 25 Dec 2015 01:41 PM

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.140 கோடி அலைவரிசைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மத்திய அரசுக்கு தமிழக காவல் துறை செலுத்த வேண்டிய அலை வரிசைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெய லலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தகவல் தொடர்புக்காக தமிழக காவல்துறையில் பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன. இவற் றுக்கான அலைவரிசைகளை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவு ஒதுக்கு கிறது.

2004-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி வரை மாநில காவல்துறைகள் வயர்லெஸ் கருவி ஒன்றுக்கு உரிமக் கட்டணமாக ரூ.100 செலுத் தியது. அதன்பிறகு ஒவ்வொரு தகவல் தொடர்பு அமைப்புக்கும் அலைவரிசைக் கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் காப்புக் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

காவல்துறைக்கான அலை வரிசைக் கட்டணம் உயர்த்தப் படுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்தும், இதை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கடந்த 2005-ம் ஆண்டுமுதல் மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழக காவல்துறை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய அலைவரிசைக் கட்டணம் ரூ.73 கோடியே 10 லட்சம் மற்றும் தாமதக் கட்டணம் குறித்து தீர்வு காண்பதற்கு முன்னரே, கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிமுதல் அலைவரிசைக் கட்டணத்தை மத்திய அரசு 3 மடங்கு உயர்த்தியுள்ளது. அதன் படி, தமிழக அரசு இப்போது ஆண்டுக்கு ரூ.13 கோடி அலை வரிசைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுமட்டுமில்லா மல், இதை தாமதமாகச் செலுத் தினால், மாதம் ஒன்றுக்கு 2 சதவீதம் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.

அலைவரிசைக் கட்டணத்தை முழுமையாக செலுத்தாவிட்டால், புதிதாக தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ, புதிய சாதனங்களை செயல்படுத் தவோ அனுமதி அளிப்பது பற்றி பரிசீலிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை வயர்லெஸ் ஒருங் கிணைப்பு இயக்குநரகம் தெரி வித்துள்ளது.

தமிழக காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசை களுக்கான தாமதக் கட்டணம் மற்றும் அலைவரிசைக் கட்டணம் ரூ.140 கோடியே 83 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற் றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வயர்லெஸ் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவு கடந் தாண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி தெரிவித்தது. இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக உள்துறை முதன்மைச் செயலர் கடந்தாண்டு செப்டம்பர் 4-ம் தேதி கடிதம் எழுதினார்.

மாநிலத்தில் காவல் பணி என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். பொது நோக்கத்துக்காக வானொலி அலைவரிசையைப் பயன்படுத்தும்போது அதற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது முற்றிலும் நியாய மற்றது, தேவையற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான ஆலோசனையின் பேரில், காவல்துறையின் வானொலி அலை வரிசை கட்டமைப்பு மீது விதிக் கப்படும் அலைவரிசைக் கட் டணங்கள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அலைவரிசைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து மாநில காவல்துறைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

உத்தரவிட வேண்டும்

எனவே, இப்பிரச்சினை குறித்து உடனடியாக ஆய்வு செய்து, தமிழக அரசு செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம் மற்றும் அலைவரிசைக் கட்டணம் ரூ.140 கோடியே 83 லட்சத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x