Published : 21 Dec 2015 01:30 PM
Last Updated : 21 Dec 2015 01:30 PM

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161 கோடி அளிப்பு

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 961 ரூபாய் வழங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று (21.12.2015) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1. சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.விஜி மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.டி.ஸ்ரீனிவாசராகவன் ஆகியோர் 3 கோடியே 35 லட்சம் ரூபாய்.

2. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.கே.ஆச்சார்யா 2 கோடியே 50 லட்சம் ரூபாய்.

3. டி.வி.சுந்தரம் அய்யங்கார் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநரும், டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் (கூஏளு டுடிபளைவiஉள) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான ஆர்.தினேஷ் மற்றும் ஸ்ரீசக்ரா டயர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி. விஜயராகவன் ஆகியோர் 2 கோடியே 50 லட்சம் ரூபாய்.

4. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மிலிந்த் ஏ காரத் 2 கோடி ரூபாய்.

5. ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் அன்ஷு புத்ராஜா 2 கோடி ரூபாய்.

6. டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் டி.வெங்கடேசன் மற்றும் துணை செயல் இயக்குநர் பி.சுந்தரராஜன் ஆகியோர் 1 கோடி ரூபாய்.

7. எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சரோஜ் கோயன்கா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யு & எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதா சிங்கானியாஆகியோர் 1 கோடி ரூபாய்.

8. முஹடுளு டிஸ்டலரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.வாசுதேவன் 1 கோடி ரூபாய்.

9. போத்தீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ரமேஷ் 1 கோடி ரூபாய் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x