Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

அதிமுக ஆட்சியில்தான் ஸ்டாலின் மதுரையில் கால் வைக்க முடிந்தது: முதல்வர் கே.பழனிசாமி பேச்சு

மதுரை தெற்கு தொகுதி முனிச்சாலையில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சரவணனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் கே.பழனிசாமி. பட ம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஸ்டாலினால் மதுரையில் கால் வைக்க முடிந்தது. அப்படி ரவுடியிசம் நிறைந்த மதுரை, அதி முக ஆட்சியில்தான் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித் தார்.

மதுரையில் நேற்று காலை புறநகர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித் துப் பேசிய முதல்வர் கே.பழனி சாமி, மாலையில் நகர் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

திருப்பரங்குன்றம், ஆரப்பாளை யம், பழங்காநத்தம், முனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் பேசினார். அவருக்கு மாநகர அதிமுக சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் வழிநெடுக மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், முனிச்சாலையில் அவர் பேசிய தாவது:

திமுகவில் நிதியைத் தவிர்த்து எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி, நிதியென்று பெயர் வைத்துக் கொண்டு நாட்டில் சொத்துகளைக் கொள்ளையடிக்கின்றனர். இந்தத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தலாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் திமுகவில் 20 வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.

ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறினார். குறிப்பாக தன் மகன் உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறினார். தற்போது அதே ஸ்டாலின், தனது மகனை வேட் பாளராக அறிவிக்கிறார்.

அதுபோல், உதயநிதியும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றார். தற்போது தந்தையின் விருப்பப்படி அரசியலுக்கு வருவதாக கூறுகிறார். இப்படி தந்தையும், மகனும் மட்டுமின்றி திமுகவினர் அவர்களுடைய சந் தர்ப்ப சூழ்நிலை, கால சூழ் நிலைக்கு தகுந்தவாறு தங்கள் நிலைபாடுகளை மாற்றிக் கொள் வர்.

திமுகவில் பிரச்சாரம் செய்ய ஆளில்லையா? துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி போன்ற மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேரன் வயது உள்ள உதயநிதி பிரச்சாரம் செய்ய வருகிறார். அவர்களை திமுக மூத்த நிர்வாகிகள் ஓடிச் சென்று வரவேற்கிறார்கள். உதயநிதி கார் கதவை நேரு குனிந்து திறந்து விடுகிறார். அப்படி திறந்து விடாவிட்டால் அவர் பதவியில் இருக்க முடியாது.ஆனால், அதிமுக ஜனநாயக கட்சி. சாதாரண தொண்டன்கூட எம்எல்ஏ அமைச்சராக, ஏன் முதல்வராகக்கூட முடியும். ஸ்டாலின், என்னைப்போல் சொல்ல முடியுமா? அவர் அப்படி அறிவித்தால் அடுத்த நாளே துரை முருகன் போட்டிக்கு வந்துவிடுவார். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஸ்டாலினே மதுரைக்கு வர முடிந்தது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தும்கூட, அவரால் மதுரையில் கால் வைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ரவுடிகள் அராஜகம் மதுரையில் இருந்தது. தற்போது மதுரையை அதிமுக அமைதிப்பூங்காவாக வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் இருண்ட ஆட்சி நடந்தது. அதனால், மக்களாகிய நீங்கள் எந்த ஆட்சி சிறந்தது என்பதை முடிவு செய்து வாக்களி யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேச சிரமப்பட்டார்

முதல்வர் கே.பழனிசாமி மதுரை மாவட்டத்தில் மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக நேற்று முன்தினம் இரவே மதுரை வந்து தங்கினார். நேற்று காலை காலை 10 மணி யளவில் மதுரை ஒத்தக்கடையில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

அவரது பிரச்சாரத்துக்காக மதுரை ஒத்தக்கடை வழியாக செல்லும் மாட்டுத்தாவணி-மேலூர் சாலையில் நேற்று காலை 9 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலூர், ஒத்தக் கடை, திருவாதவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட வட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானாவில் இருந்து ‘ரிங்’ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. அதனால் வாகன ஓட்டுநர்கள், பயணிகள் சிரமப்பட்டனர்.

ஒத்தக்கடையில் முதல்வர் கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபால கிருஷ்ணனை ஆதரித்து பேச ஆரம்பித்தபோது, பேச முடியாமல் தொண்டை கரகரவென்று இருந்ததால் மிகுந்த சிரமப்பட்டார். அவரது பேச்சு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புரியவில்லை. மேலும் ‘மைக்’கும் அவர் தடையின்றி பேசுவதற்கு ஒத்துழைக்காமல் இரைந்து கொண்டிருந்தது. அதிருப்தி யடைந்த அவர், என்னய்யா என்று கட்சிக்காரர்களை பார்த்து எரிச்சலடைந்தார். அதன்பிறகு பேசஆரம்பித்த அவர், தொண்டை கரகரவென்று இருக்கிறது, வேறு வழியில்லை நீங்களாக புரிந்து கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பேசினார்.

கோரிப்பாளையத்தில் மேம்பாலம் உடனே கட்டப்படும்

# ஒத்தக்கடை ஜங்ஷன் பகுதி வியாபார வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்த பகுதி. அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளை பார்த்து, நீங்கள் தற்போது எப்படி மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வியாபாரம் செய்கிறீர்களோ அதுபோல அதிமுக ஆட்சி தொடர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றார்.

# அதிமுக ஆட்சியில் 58 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து இருக்கிறோம். ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகள் கூட, இனி நீட் தேர்வு, போட்டித் தேர்வுகள், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்த மடிக்கணினி உதவும்.

# முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களுமே அதிகளவு திரண்டிருந்தனர். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெயரளவுக்கே வந்திருந்தனர்.

# மதுரையில் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.

# கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி உடனே தொடங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x