Published : 06 Oct 2015 07:55 AM
Last Updated : 06 Oct 2015 07:55 AM

மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் தேர்தல் அணுகுமுறை குறித்து அக்.23-ல் முடிவு: திருவாரூரில் வைகோ தகவல்

திருவாரூரில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

ஜூலை மாதம் 27-ம் தேதி மக்கள் நல கூட்டு இயக்கக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் கூடி, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 5 மண்டலங் களில் ஆகஸ்ட் 13-ல் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. பின்னர் கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கூட்டணியாக மாறவேண்டும் என்று முத்தரசன் விருப்பம் தெரிவித்தார். அந்த விருப்பத்தின் அடிப்படையில் தற்போது திருவாரூரில் இந்த கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இடையில் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி யிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத் தில், மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுவார் என தீர்மானிக்கப் பட்டுள்ளது.

மேலும், இயக்கத்தின் குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கு வதற்கு 4 கட்சிகளையும் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 23-ம் தேதி சென்னையில் கூடி 2016 சட்டப்பேரவைத் தேர் தலுக்கான அணுகுமுறை குறித்து விவாதிக்கப்படும்.

அதையடுத்து நவம்பர் 2-ம் தேதி கூட்டு இயக்கத்தின் தலை வர்களால் இறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை வெளியிடப்படும். நவம்பர் 28-ம் தேதி கோவையில் செயல் திட்ட விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெறும்.

மக்கள் கூட்டு இயக்கத்தில் 4 கட்சிகள் மட்டுமே முக்கிய இடம்பெறும். எங்களுக்குள் எந்தவித பூசலோ, பிரச்சினையோ எழவில்லை என்றார்.

பேட்டியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்த ரசன் ஆகியோர் உடனிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x