Last Updated : 31 Dec, 2019 10:36 AM

 

Published : 31 Dec 2019 10:36 AM
Last Updated : 31 Dec 2019 10:36 AM

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

நெல்லை

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு தொடர்பாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்த நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய விதத்தில் சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் மீது குற்றம் செய்யத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 504,505,505(2) மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு.செய்துள்ளனர்.

நெல்லை கண்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறை இயக்குனருக்கு பாஜக கட்சியின் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லைக் கண்ணன் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான உடனேயே, தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலும், "பட்டப்பகலில் வெட்டவெளியில் என்னே ஒரு அறைகூவல். மாற்று கட்சியினரும், ஊடகங்களும் ஒரு சிறுகண்டனம் இல்லாது
கைகொட்டி இந்த வன்முறையை ஆதரிப்பது என்ன விதமான அரசியலோ? சட்டரீதியாக @BJP4TamilNadu வழக்கு பதிவுசெய்யும். @CMOTamilNadu இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் முன்பு தர்ணா..

இதற்கிடையில் நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டின் முன் திரண்டுள்ள பாஜகவினர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டு வருகின்றனர்.

தர்ணாவில் ஈடுபட்டுள்ள பாஜகவினர்

இந்நிலையில், அதிமுக சார்பிலும் இன்று நெல்லை கண்ணனுக்கு எதிராக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x