Published : 22 Oct 2019 10:37 AM
Last Updated : 22 Oct 2019 10:37 AM

கோயிலுக்குள் நள்ளிரவில் புகுந்து துணிகரம்; சிவகிரியில் சுவாமி சிலைகள் உடைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு

ஈரோடு அருகே கோயிலுக்குள் புகுந்த மர்ம கும்பல், சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியது. கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த தலையநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட காளியண்ணன் கோயில் தொப்பம் பாளையத்தில் உள்ளது. கடந்த செப்டம்பரில் இக்கோயில் புதுப்பிக் கப்பட்டு தினசரி பூஜை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இக்கோயிலுக்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந் துள்ளது. ஹெல்மெட் மற்றும் முக மூடி அணிந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், 5 அடி உயரமுள்ள காளியண்ணன் சிலைகளை சம்மட் டியால் அடித்து, உடைத்தனர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு கோயிலுக்கு வந்து பார்த்தவர்களை, அந்த கும்பல் மிரட்டல் விடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியது. சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் பரவியதால் சிவகிரி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். சிவகிரி, சந்தைமேடு, அம்மன் கோயில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

பதற்றம் அதிகரித்ததால் நூற் றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். ஈரோடு எஸ்.பி. சக்திகணேசன், டி.ஆர்.ஓ. கவிதா, ஆர்.டி.ஓ. முருகேசன், டிஎஸ்பி ராஜ் ஆகியோர் கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது.

சம்பவத்தை கண்டித்து கொமதேக சார்பில் அம்மன் கோவில் பகுதியில் சாலை மறியல் நடந்தது. போலீஸாரின் சமாதா னத்தை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. கோயில் கண் காணிப்புக் கேமராவில், சிலை களை உடைத்த நபர்களின் உருவங் கள் பதிவாகியுள்ளதால் அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x