Published : 16 Oct 2019 10:07 AM
Last Updated : 16 Oct 2019 10:07 AM

சுகாதாரத்தில் போதிய கவனம் செலுத்தாததால் முதலிபாளையத்தில் வடமாநிலத்தவர்களுக்கு பரவும் டெங்கு: 3 பேர் பாதிப்பு; ஒரே நாளில் ரூ.1.90 லட்சம் அபராதம் விதிப்பு 

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் 

திருப்பூர் மாநகர் முதலிபாளையம் தொழிற்பேட்டை பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள நிறுவனங்களில் சுகாதாரம் தொடர் பான பல்வேறு புகார்கள் எழுந்ததை யடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் பலரும் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறையினர், ஊராட்சி அலுவலர்கள், வட்ட வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும் போது, ‘முதலிபாளையம் சிட்கோவில் தனியார் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் நிறுவனத் தில், ஜெனரேட்டர் அறையில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப் புழுக் கள் அதிகம் இருப்பது கண்டறி யப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் 15 பேர் பணிபுரியும் இடத்தில் போதிய சுகாதார வசதி செய்யப்படவில்லை. தொழிலாளர் களுக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒடிசா, மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆண்கள் 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நிறுவன உரிமையாளருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வெள்ளைக் கரடு பகுதியிலுள்ள தனியார் பழைய இரும்புக் கம்பெனியில் தண்ணீர் தேங்கவிட்டு, கொசுப்புழு உற்பத்தியாக வழிவகை செய்த தாக, அவர்களுக்கு ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சுகாதாரமின்றி கொசுப்புழு உருவாக காரணமாக இருந்த இரு வீடுகளுக்கு தலா ரூ.20000 வீதம் ரூ.40000 அபராதம் விதிக்கப்பட்டது' என்றனர்.

இந்தியில் விழிப்புணர்வு நோட்டீஸ்

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜெயந்தி கூறும்போது, ‘கடந்த ஜனவரி தொடங்கி தற்போதுவரை 743 பொது சுகாதார நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது. அதில் அக்டோபர் மாதத்தில் 100 விநியோகிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள், அவர் களது இல்லங்களில் சுகாதாரத்தை காக்க தவறுகிறார்கள். இதனால், அவர்களுக்கு டெங்கு பாதிப்பு அதி கம் ஏற்படுகிறது. முதலிபாளையம் பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு, சுகா தாரமாக வீடுகளை பராமரிப்பது ஆகிய விஷயங்கள் தொடர்பாக ஊராட்சி மூலமாக இந்தியில் விழிப் புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

தொடர் மழை காரணமாக, திருப்பூர் மாநகரப் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநகராட்சி நல அலுவலர் பூபதி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘திருப்பூர் மாநகரப் பகுதியில் இதுவரை 8 பேர் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட் டிருந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று நலம் பெற்றுவிட்டனர். கடந்த முறை டெங்கு அதிகளவில் பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து, அங்கு சுகாதாரப் பணிகளை செய்து வருகிறோம். மேலும், மாநகரில் உள்ள 17 நகர்ப்புற சுகாதார நிலை யங்களின் கீழ்வரும் பின்னலாடை நிறுவனங்களில் கணக்கெடுக்கப் பட்டு, வரும் 22-ம் தேதி முதல் அங்குள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனையை நடத்த அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x