Published : 16 Jul 2017 11:02 AM
Last Updated : 16 Jul 2017 11:02 AM

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா: ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது

சென்னை புத்தகத் திருவிழா ராயப் பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ‘சென்னை புத்தகத் திருவிழா-ஜூலை 2017’ நடைபெற உள்ளது.

250-க்கும் மேற்பட்ட அரங்குகள்

இதில், 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்.

கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில், தமிழ் பதிப்புலகம் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி தற்போது வாசகர்களை மட்டுமே நம்பி உள்ளது. எனவே, அதனை மேம்படுத்தவும், தமிழ் எழுத்தா ளர்கள், பதிப்பாளர்கள், வாசகர் களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீராமானுஜர் கருத்தரங்கம்

இந்த புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமாத் துறை பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப் பிக்கும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

குலுக்கல் முறையில் தினந் தோறும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப்படக் கண்காட்சியும் நடை பெற உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப்படும். வாசகர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகங்களை வாங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு

புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா ஜூலை 21-ம் தேதி காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. இதில், தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் கூறினார்.

250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்காண புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x