Published : 17 Jun 2016 07:25 AM
Last Updated : 17 Jun 2016 07:25 AM

5 ஆண்டுகளில் 16 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா அறிவிப்பு

புதிய கிரானைட் கொள்கை, அரசே தாதுமணல் விற்பனை

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த தமிழகத் தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என சட்டப் பே ரவையில் ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், புதிய கிரானைட் கொள்கை வகுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கடந்த மே 16-ம் தேதி நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 15-வது சட்டப்பேர வையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவரது உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அரசு நிர்வாகத்தின் வெளிப் படைத்தன்மையை மேம்படுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உரிய திருத் தங்களுடன் லோக்பால் சட்டம் நிறைவேறிய பிறகு தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு நிறுவப்படும்.

* மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிப்பதற்கான சட்ட வரைமுறையை மத்திய அரசு மூலம் இயற்ற தமிழக அரசு நட வடிக்கை எடுக்கும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு (மொத்தம் 16 ஆயிரம் மெகாவாட்) தமிழகத்தின் மின்உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும்.

* தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு மாநில அரசுக்கான நிதி ஆதாரங் களை பெருக்க, புதிய கிரானைட் கொள்கையை வகுக்கவும், தாது மணல் விற்பனையை நேரடியாக அரசே ஏற்று நடத்தவும் நட வடிக் கை எடுக்கப்படும்.

* மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியா கவும் தமிழ் மொழியை அறிவிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

* தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டுடன் பின்னிப் பிணைந் திருக்கும் ஜல்லிக்கட்டு விளை யாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை கள் எடுக்கப் படும்.

* காவிரி மேலாண்மை வாரி யத்தையும், காவிரி நதிநீர் முறைப் படுத்தும் குழுவையும் விரைவில் அமைப்பதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* 24 மணி நேர அம்மா அழைப்பு மைய சேவை மேலும் வலுப் ப டுத்தப்படும்.

* அனைத்து அரசுத் துறைகளின் சேவைகளும் மக்களை எளிதில் சென்றடைய பொதுச்சேவை மையங்கள் மேலும் விரிவுபடுத் தப்படும்.

* வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க சென்னையிலும், கடலோர மாவட் டங்களிலும் விரிவான வெள்ளத் தடுப்பு திட்டங்களை அரசு உரு வாக்கும்.

* இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்கள் உட்பட அனைத்து குற்றங்களையும் திறம்பட கையாள்வதற்காக காவல்துறைக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டு அதன் செயல் தி றன் வலுப்படுத்தப்படும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காவல் துறை தொடர்ந்து சுதந்திரத்துடன் கையாள வழிவகை செய்யப்படும்.

* இலங்கை இனப்படு கொலைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் படும். இலங்கையில் வாழும் தமி ழர்களுக்கு மற்றவர்களைப்போல சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* 2023 தொலைநோக்குத் திட்டத்தை செயல்திட்டமாகக் கொண்டு தமிழக மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரம் அளிக்கப்படும்.

* திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கம் தமிழகத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.

* கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை களை நிலைநாட்ட தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவது உறுதி செய்யப்படும்.

* சென்னைக்கு அருகே நெம் மேலியில் தினமும் 150 மில்லி யன் லிட்டர் மற்றும் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங் கள் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.

* தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

* சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் முக்கிய தொழில் முனையமாக பொன்னேரி உருவாக்கப்படும்.

* முதல்வர் ஜெயலலிதாவின் திறமையான தலைமையின்கீழ் இயங்கி வரும் தமிழக அரசு, மற்ற மாநிலங்களை விஞ்சி, வெற்றியின் உச்சிக்கு தமிழகத்தை கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்பு கிறேன்.

இவ்வாறு ஆளுநர் உரையாற் றினார்.

முன்னதாக, முதல்வர் ஜெயல லிதா 10.52 மணிக்கு பேரவைக்கு வந்தார். அதற்கு முன்பே எதிர்க்கட் சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வந்து அமர்ந்திருந் தனர். ஆளுநர் கே.ரோ சய்யா, காலை 10.57 மணிக்கு வந்தார். அவரை, பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவைச் செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பேரவை அரங்குக்குள் அழைத்து வந்தனர்.

அரங்குக்குள் ஆளுநர் வந்ததும் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் வந்து அமர்ந்ததும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11.01 மணிக்கு ஆளுநர் தனது ஆங்கில உரையை வாசிக்க தொடங்கி 11.37 மணிக்கு நிறைவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x