Published : 03 Apr 2017 09:32 AM
Last Updated : 03 Apr 2017 09:32 AM

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம்: ரசிகர் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தல்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சத்ய நாராயணா மற்றும் சுதாகர் ஆகியோர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினர். இக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மட்டும் அனு மதிக்கப்பட்டனர். ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சுதாகர், “வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களோடு ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்கவுள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்தோம். மாவட்டத் துக்கு 250 பேர் வரை புகைப் படம் எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மற்றபடி வேறு எதைப்பற்றியும் ஆலோசிக்க வில்லை" என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட நிர்வாகியான இளங்கோ கூறும்போது, “தமிழகத்தின் அரசியல் சூழல் தற்போது சரியில்லை. ஆகவே தலைவர் ரஜினிகாந்த் அரசிய லில் களம் காண இதுவுமே சரியான தருணம் என்று நிர்வாகி களிடம் எடுத்துக் கூறினோம். இது குறித்து எழுதித் தரச் சொன்ன நிர்வாகிகள் தலைவ ரோடு நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில், இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித் தார்கள்" என்று கூறினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர். ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்கும்போது புகைப்படம் எடுத்துக்கொள்வ துடன் அவர்களுக்கு விருந் தளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x