Published : 23 Apr 2017 10:22 AM
Last Updated : 23 Apr 2017 10:22 AM

பலருடனான முகநூல் நட்புக்கு எதிர்ப்பு: மாணவியை கொன்ற காதலர் கைது

சீர்காழி அருகே பூம்புகாரில், பலருடனான முகநூல் நட்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட தகராறில் பொறியியல் கல்லூரி மாணவியை கொலை செய்த காதலர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் செல்வராஜ் மகன் மதன்ராஜ்(22). இவர் புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர், சென்னை அருகே கும்மிடிப் பூண்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் துர்கா படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக மதன்ராஜிடம் துர்கா சரிவர பேசா மல் இருந்துள்ளார். அதே சமயம், முகநூலில் துர்காவுக்கு அதிக நண்பர்கள் இருந்ததை அறிந்த மதன்ராஜ் ஆத்திரமடைந் துள்ளார்.

இந்நிலையில், சென்னை யில் இருந்து நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு திரும் பிக்கொண்டு இருந்த துர்காவை, மயிலாடுதுறையில் வந்து தன்னை சந்திக்குமாறு மதன்ராஜை அழைத்துள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் துர்காவை சந்தித்த மதன்ராஜ், அவரை தனது இருசக்கர வாக னத்தில் பூம்புகார் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு துர்காவின் முகநூல் நட்பு தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மதன் ராஜ், அருகில் இருந்த கருங்கல்லைத் தூக்கி துர்காவின் தலையில் போட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த துர்கா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, அங்கிருந்து மதன்ராஜ் தப்பிச் சென்றார். நேற்று அவ்வழியே சென்றவர் கள் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பது குறித்து பூம்புகார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு சென்று, துர்காவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற் கொண்டனர். இந்நிலையில், பூம்புகார் காவல் நிலையத்தில் சரணடைந்த மதன்ராஜிடம் போலீ ஸார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x