Published : 22 Apr 2017 09:02 am

Updated : 20 Jun 2017 10:21 am

 

Published : 22 Apr 2017 09:02 AM
Last Updated : 20 Jun 2017 10:21 AM

விவசாயிகள் பிரச்சினைக்காக சென்னையில் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

விவசாயிகள் பிரச்சினைக்காக போராடுவது குறித்து முடிவெடுப் பதற்காக திமுக சார்பில் கடந்த 16-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவையும் பங்கேற்றன.


அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்று அரசியலை முன்னெடுப்ப தாகக் கூறி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் 25-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக மயி லாப்பூர் மாங்கொல்லையில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பல் வேறு கட்சிகளை ஓரணியில் திரட்டி திமுக பொதுக்கூட்டம் நடத்துகிறது. இது வருங்காலத்தில் அமைய வுள்ள புதிய கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விவசாயிகள் பிரச்சினைசென்னையில் இன்று திமுககாங்கிரஸ்இடதுசாரி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்புதிய கூட்டணிக்கு அச்சாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author