Published : 19 Apr 2017 07:53 AM
Last Updated : 19 Apr 2017 07:53 AM

ஆய்வக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

அரசு பள்ளி ஆய்வக உதவி யாளர் பதவிக்கு தேர்வு செய்யப் பட்டோருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப் பட்ட ஆய்வக உதவியாளர் பணி யிடங்களுக்கான நேரடி நியமனத் துக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் மார்ச் 24-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப் படையில், ஒவ்வொரு மாவட்டத்தி லும் காலி பணியிடங்களுக்கேற்ப ‘ஒரு காலியிடத்துக்கு 5 பேர்’ என்ற விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தெரிவுப்பட்டியல் ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் வெளியிடப் பட்டது.

பதவிக்கு தெரிவு செய்யப் பட்டோருக்கு பணிநியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் அரியலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியா குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 21 மாவட்டங்களில் 2,444 பேருக்கு 17-ம் தேதி அன்று வழங்கப்பட்டது.

மீதமுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 1,678 பணிநாடுநர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலரால் தேர்வு ஆணை மற்றும் பணிநியமன ஆணை வழங்கப்படும். ஆய்வக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்கு ஆய்வக பணி நியமன ஆணை களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.உதயச் சந்திரன், பள்ளிக் கல்வி இயக்கு நர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் உள்ளிட்டோர் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x