Published : 29 Jun 2017 09:42 AM
Last Updated : 29 Jun 2017 09:42 AM

113சி அரசாணை வெளியீடு: சென்னையில் விதிமீறிய 1.50 லட்சம் கட்டிடங்களுக்கு விடிவு

விதிமீறல் கட்டிடங்களை வரன் முறைப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட புதிய விதிகளின்படி சென்னையில் மட்டும் சுமார் 1.5 லட்சம் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தில் 113சி விதிகளை உட்புகுத்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 113சி விதிகளின்படி பல்வேறு விதிமீறல்களுடன் கட்டிடங்களைக் கட்டியவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம்.

விதிமீறல்களைப் பொறுத்து அதற்கான கட்டணங்களையும் அரசு நிர்ணயித்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும் சுமார் 1.5 லட்சம் விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. புதிய விதியின் மூலம் இவற்றை இடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது தவிர்க் கப்பட்டுள்ளது. அதேவேளையில் நீர்பிடிப்பு பகுதிகள், கடற்கரை பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை வரன் முறை செய்ய இயலாது. விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது வரன்முறைப்படுத்த வேண்டிய கட்டிடங்களை வரன் முறைப்படுத்திவிட்டு, மற்ற விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது.

இது குறித்து இந்திய கட்டுநர்கள் சங்க கவுரவ செயலாளர் ராம்பிரபு கூறியதாவது: ஏற்கெனவே விதிமீறல் கட்டிடங்களை வரன் முறைப்படுத்த 1999, 2001, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் அறிவிப்பு வெளியானது. அப்போது சுமார் 5,000 கட்டிடங்கள் வரன்முறை செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்றம் அவற்றை ரத்து செய்தது.

விழிப்புணர்வு வேண்டும்

தற்போது 113சி விதிகள் வந்துள்ளதால் இதற்கு முன் அரசு நடவடிக்கையில் சிக்கிய கட்டிடங்கள், நோட்டீஸ் அனுப் பப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள். விதிமீறல் இருப்பது தெரியாமல் இருக்கும் பொதுமக்களும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டு மானால், அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது சென்னையில் மட்டும் 1.5 லட்சம் விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன என்றார்.

சிஎம்டிஏ கண்காணிப்பு குழு உறுப்பினர் தேவசகாயம் கூறுகையில், ‘‘113சி விதிகளின்படி சிறிய வீடுகளை மட்டுமே வரன்முறைப்படுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை வரன்முறைப்படுத்த கூடாது.

அவ்வாறு செய்தால் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்’’ என்றார்.

113சி விதிகளின்படி சிறிய வீடுகளை மட்டுமே வரன்முறைப்படுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை வரன்முறைப்படுத்த கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x