Published : 10 Jan 2017 09:19 AM
Last Updated : 10 Jan 2017 09:19 AM

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும்: திருநாவுக்கரசர், அன்புமணி வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்பு களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திரு நாவுக்கரசர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கள் கூறியிருப்பதாவது:

சு. திருநாவுக்கரசர்:

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தும் (நீட்) திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் மாநில திட்டங்களில் படித்தவர் களால் அதில் வெற்றி பெற முடிவதில்லை.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதால் அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவம், பொறியியல் படிப்பு களில் சேர முடிகிறது. கடந்த 2015-ல் ஐ.ஐ.டி.யில் மொத்த முள்ள 180 இடங்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்த 9 மாண வர்களுக்கு தான் இடம் கிடைத் துள்ளது. தகுதியான ஆசிரியர்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளிகளில் இல்லாததே இதற்கு காரணம்.

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதைப் போல பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது நடந்தால் ஏழை, கிராமப்புற, பின்தங்கிய மாணவர்கள் பொறியியல் கல் லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்:

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியி லேயே இந்த யோசனை முன் வைக் கப்பட்டது. பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்ததால் இத்திட்டம் கைவிடப் பட்டது. மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக முன்வைக்கப்படும் அனைத்து காரணங்களும் இதற் கும் பொருந்தும். முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு என்பது முழுக்க முழுக்க சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத் தின் அடிப்படையில் நடத்தப்படு வதாகும். ஆனால், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாணவர்கள் மாநில பாடத் திட்டங்களிலேயே படிக்கின்றனர்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் தமிழக பாடத் திட்டத்தில் படித்த 0.07 சதவீத மாணவர்களே வெற்றி பெற முடிந்துள்ளது. பாடத்திட்டத்தை வலுப்படுத்த போதிய அவகாசம் கொடுக்காமல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கையை முறைப்படுத்த வேண்டும் என்பதை பாமக ஆதரிக்கிறது. ஆனால், மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு கூடாது என்பதே பாமகவின் நிலைப்பாடாகும்.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் முதல் ஏழைகள் முதல் அனை வருக்கும் ஒரே மாதிரியான கல்வி வழங்கப்படும் போது, ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து சிந்திக்கலாம். எனவே, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x