Published : 12 Apr 2017 07:39 AM
Last Updated : 12 Apr 2017 07:39 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 160க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 160க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 770க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 763க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x