Published : 22 Feb 2017 09:25 AM
Last Updated : 22 Feb 2017 09:25 AM

ஜெ. பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள்: பிப்ரவரி 24 முதல் 28 வரை விருகம்பாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 69-வது பிறந்த நாளை முன் னிட்டு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலை வருமான மு.தம்பிதுரை தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் தனது வாழ்நாளை மக் களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி

அதனை முன்னிட்டு அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளி லும், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேர ளம், டெல்லி, அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்களும், கலை நிகழ்ச்சி களும் நடைபெறவுள்ளன.

அதிமுக தலைமை நிர்வாகி கள், மாவட்டச் செயலாளர் கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாண வரணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகி களும் இந்த பொதுக்கூட்டங் களில் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நலத்திட்ட உதவி களை வழங்குவார். அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங் கோட்டையன் - சென்னை மதுரவாயல், பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் - ஒட்டன்சத்திரம், அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்தி லிங்கம் - தஞ்சாவூர் கரந்தை, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை - கரூர், அமைச் சர்கள் பி.தங்கமணி - ராசிபுரம், எஸ்.பி.வேலுமணி - தொண்டாமுத்தூர், டி.ஜெயக் குமார் சென்னை எழும்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களி்ல் பங்கேற்று மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்குவார்கள்.

இவ்வாறு தம்பிதுரை தெரி வித்துள்ளார்.

செங்கோட்டையன் மரியாதை

ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஜெயலலிதா உருவப்படத்துக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்துவார். ஜெயலலிதா பிறந்த நாள் மலரையும் அவர் வெளியிடுவார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x