Published : 09 Mar 2017 09:59 AM
Last Updated : 09 Mar 2017 09:59 AM

‘தி இந்து’ இன் ஸ்கூல், செல்லோ சார்பில் மாணவர்களுக்கான கையெழுத்துப் போட்டி

‘தி இந்து’ இன் ஸ்கூல் மற்றும் செல்லோ இந்தியா நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான அழகான கையெழுத்துப் போட்டி கோவையில் வரும் 11-ம் தேதி சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இப் போட்டியில், கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், தங்களது பள்ளியின் அடையாள அட்டை, ‘தி இந்து’-விலிருந்து அனுப்பப்பட்ட இ-மெயில் கடித நகலுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும்.

ஏற்கெனவே நடைபெற்ற முதல்சுற்றுப் போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டி ஜூனியர் (4 முதல் 6-ம் வகுப்பு), சீனியர் 7 முதல் 9-ம் வகுப்பு வரை) என 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பகல் 12 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கே.நளினி பரிசு வழங்குகிறார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு கோப்பை, கைக்கடிகாரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கு கையெழுத்து நிபுணர்கள் ஆர்.எம்.முருகப்பன், சுரேஷ் முருகன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்படுகின்றனர்.

போட்டியில், சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி, என்.எஸ்.ஆர். பேக்கர்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்துள்ளன. விவரங்களுக்கு 9003913286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x