Published : 01 Jun 2016 08:45 AM
Last Updated : 01 Jun 2016 08:45 AM

28 மாவட்டங்களுக்கு சராசரி பருவமழை கிடைக்கும்: வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் தகவல்

2016-ம் ஆண்டுக்கான தெற்மேற் குப் பருவமழை ஜூன் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில், இப் பருவமழை குறித்த முன்னெச் சரிக்கை தகவல்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

இந்த முடிவுகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குநரக இயக்குநர் சி.ஜெயந்தி, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய பேராசியர் மற்றும் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை குறித்த ஆய்வுக்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பு நீர் வெப்ப நிலை, தென் மண்டல காற் றழுத்த குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆஸ்திரேலி யாவில் இருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ என்ற கணினி கட்டமைப்பு மூலம் தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

எதிர்வரும் தென்மேற்குப் பருவ காலத்தில் தமிழகத்தின் கோவை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர 28 மாவட்டங்கள் சராசரி மழையளவைப் பெறும். கோவை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்கள் சராசரி மழையளவை விட குறை வாக மழையளவைப் பெறும்.

குறைந்தபட்ச மழை

நீலகிரி மாவட்டத்தில் 691 மி.மீ மழையும், அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் 455 மி.மீ, வேலூரில் 438 மி.மீ, சென்னை 428 மி.மீ, காஞ்சிபுரம் மற்றும் சேலத்தில் 420 மி.மீ, திருவள்ளூர் 418 மி.மீ ஆகிய மாவட்டங்கள் அதிகபட்ச மழைப்பொழிவைப் பெறும். குறைந்தபட்சமாக தூத்துக்குடி 77 மி.மீ மழையைப் பெறும்.

இந்த மழையைப் பயன்படுத்தி, சென்னை, மதுரை, தஞ்சை, திண்டுக்கல், நாகை, திருவாரூர், விருதுநகர், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் நீர் சேகரிப்புக்கும், இதர மாவட்டங்கள் வேளாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கோவையை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை மட்டுமே அதிக பயனளிக்கும். தென்மேற் குப் பருவமழை வழக்கமாகவே குறைவுதான். ஆனால் கோடை மழை குறைந்ததற்கு பல காரணங் கள் உள்ளன. கோவையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் அதிகம். மழை குறைவு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணங்களே இதற்கு காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x