Published : 03 Apr 2017 09:09 AM
Last Updated : 03 Apr 2017 09:09 AM

விசைத்தறி கூடங்களில் உற்பத்தி நிறுத்தம்: கோவை, திருப்பூரில் ரூ.25 கோடி உற்பத்தி பாதிப்பு

ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண் டும் என வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விசைத்தறி உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளனர். இத னால் நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங் களில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு விசைத்தறிக் கூடங்களில் இருந்து காடா துணி உற்பத்தி செய்து கொடுக் கப்படுகிறது. இதற்காக கோவை, திருப்பூரில் 1.25 லட்சம் விசைத்தறி கள் இயங்குகின்றன. இதில் சுமார் 10 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்களும், சுமார் 3 லட் சம் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

பாவு நூலை காடா துணியாக உற்பத்தி செய்யக்கூடிய விசைத் தறிக் கூடங்களுக்கு, ஜவுளி உற் பத்தியாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில் கூலி வழங்குகிறார்கள். துணி ரகங்களுக்கு ஏற்றவாறு ஒப்பந்த அடிப்படையில் விசைத்தறி உரிமை யாளர்களுக்கு கூலி வழங்கப்படு கிறது. ஆனால், கடந்த சில ஆண்டு களாக ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி வழங்கு வதில்லை என விசைத்தறி உரிமை யாளர்கள் குற்றம்சாட்டி வருகின் றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவில்லை.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் ஈ.பூபதி கூறியதாவது:

கோவை, திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தி மதிப்பு தோராயமாக ரூ.25 கோடி ஆகும். இவ்வளவு பெரிய உற்பத்தி இருந்தும், விசைத்தறி உரிமையாளர்களுக்கு சரிவர கூலி வழங்கப்படுவதில்லை.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் கூலி ஒப்பந்தம் கடந்த 2014-ல் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அதை ஜவுளி உற்பத்தி யாளர்கள் முறையாக பின்பற்ற வில்லை. பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2016 பிப்ரவரியில் ஒப்பந்தப் படி ஊதியம் வழங்க ஒப்புக் கொண்டனர். ஆனால் மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு ஒப்பந் தத்தை மீறி, கூலியைக் குறைத்து வழங்கினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்தப் பிரச்சினை நிலவுகிறது. பண மதிப்பு நீக்கம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளால், எங்களது கோரிக்கையை எழுப்ப முடியவில்லை.

தற்போது எங்கள் கோரிக் கைகளை வலியுறுத்துகிறோம். ஒப்பந்தத்தை முறையாக செயல் படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் வலியுறுத்தி னோம். ஆனால் தீர்வு கிடைக்க வில்லை. எனவே இனியும் விசைத் தறிகளை நஷ்டத்தில் இயக்க முடியாது என்பதால் உற்பத்தி நிறுத்தத்தில் இறங்கியுள்ளோம். ஒப்பந்தப்படி கூலியை பெற்றுக் கொடுக்க மாவட்ட நிர்வாகங்களும், தொழிலாளர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x