Published : 02 Jan 2019 08:21 AM
Last Updated : 02 Jan 2019 08:21 AM

திருவாரூர் வேட்பாளர் தேர்வு; திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர் தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (3-ம் தேதி) தொடங்கி 10-ம் தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து, திருவாரூரில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர் களிடம் 4-ம் தேதி நேர்காணலை முடித்து அன்றே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவை தொடர்ந்து அதிமுகவும் விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்தது.

திமுகவை பொறுத்தவரை திருவாரூர் தொகுதி தேர்தல் முக்கியமானது. திமுக தலைவராக இருந்த கருணாநிதி, 2 முறை தொடர்ந்து அதே தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். எனவே தொகுதியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

இந்நிலையில், திருவாரூரில் திமுக வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செய லாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனை வேட்பாளராக நிறுத்தலாமா அல்லது கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது வேட்பாளராக நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x