Published : 05 Oct 2018 08:05 AM
Last Updated : 05 Oct 2018 08:05 AM

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்; 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு: அலுவலகம், பள்ளிகளில் பணிகள் பாதிப்பு

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட் டோரின் ஊதிய முரண்பாடுகளை களைவது, ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், 21 மாத கால நிலுவைத்தொகை என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அக்டோபர் 4-ம் தேதி அன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக விடுமுறை எடுத்ததால் அரசு அலுவலக பணிகள் பாதிப்புக்கு உள்ளாயின. அதேபோல், அரசு பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்களும் வரவில்லை.

தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம்

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாலுகா தலைமையங்களில் ஆர்ப் பாட்டங்களும் நடைபெற்றன. சென் னையில் பல்வேறு அரசு துறை களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கள் தாமோதரன், கு.வெங்கடேசன், மு.அன்பரசு, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் காந்திராஜ், கங்கா தரன், பக்தவத்சலம், அருணா, சென்னை மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் டேனியல் ஜெயசிங், சாந்தகுமார் ஆகியோர் உரை யாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஒருங் கிணைப்பாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் சம்பளம் நிறுத்தப்படும் என அரசின் தலைமைச் செயலர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப் பட்ட பிரச்சினை. இந்தப் போராட்டத் தில் 6 லட்சம் ஊழியர்கள் ஈடுபட் டனர்.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசுக்கு தெளிவில்லை. அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராடுகிறார்கள் என்று பொதுமக்கள் தவறாக நினைக்கிறார்கள். அரசு துறைகளில் ஒவ்வொரு பணியையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்க முயற்சி நடக்கிறது. ஆட்குறைப்புக்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளனர். ஊதிய முரண் பாடுகளை களைய அமைக்கப் பட்ட ஒரு நபர் குழுவின் காலத்தை நீட்டித்துக்கொண்டே போகிறார் கள்.

அடுத்தகட்டமாக சேலத்தில் அக்டோபர் 13-ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கா விட்டால் நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x