Published : 22 Jul 2024 07:48 AM
Last Updated : 22 Jul 2024 07:48 AM

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா ஏன்? - பிரதமர் விளக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான யுபிஎஸ்சி தலைவரான குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் 5 ஆண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில், அவர் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. யுபிஎஸ்சியில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

ஏராளமான ஊழல்களும், ராஜினாமாவுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை நடத்தியநீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

அதேபோல யுபிஎஸ்சியிலும் ஊழல்கள் வெளியாகி அதன்தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றகுடிமைப்பணி இடங்களை நிரப்புவதற்கான மத்திய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதன்மூலம் ஏற்படுகிற விளைவுகளினால் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x