Published : 18 Jul 2024 06:20 AM
Last Updated : 18 Jul 2024 06:20 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைசிபிஐ விசாரிக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஓர்அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சரணடைந்தவர்களுக்கு பின்னால் அரசியல்தொடர்பு இருக்கிறது என்று அவரதுகுடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று அவரது குடும்பத் தினரும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்என்று வலியுறுத்துகிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளேன்.

சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை நான்ஆதரிக்கிறேன். சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினால்தான் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க முடியும். எனவே மத்திய அரசுசாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் குரூப் சி, குரூப் டி பணிகளில் 100 சதவீத இடஒதுக்கீடு அம்மாநிலத்தவர்கே வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சொந்தமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை.

ஆனால், 100 சதவீதம் என்று இல்லாமல் 85 சதவீதம் அம்மாநிலத்தினருக்கும் மீதமுள்ளவை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்தால் நல் லது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x