Published : 04 Jul 2024 04:50 AM
Last Updated : 04 Jul 2024 04:50 AM
தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஜூன் 30-ம்தேதி காலை விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றுமுன்தினம் மாலை வரை அதே அளவு தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்ந்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மேட்டூர் அணைக்கு கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 1,038 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 876 கனஅடியாகவும், நேற்று818 கனஅடியாகவும் குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 39.65 அடியாகவும், நீர் இருப்பு 11.91 டிஎம்சியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT