Published : 24 Jun 2024 08:40 AM
Last Updated : 24 Jun 2024 08:40 AM

தவெக விருது விழா: மாணவர்களுக்கான அனுமதி சீட்டு நிர்வாகிகளிடம் விநியோகம்

கோப்புப்படம்

சென்னை: கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கிய விஜய், இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, ‘விரைவில் சந்திப்போம்’ என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் சேகரித்து, தலைமைக்கு அனுப்பினர். இப்பணிகள் முடிந்த நிலையில், மாணவர்களை 2 கட்டமாக சந்தித்து விஜய் பரிசு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு அரங்கில் வரும் 28-ம் தேதியும், ஜூலை 3-ம் தேதியும் இரு கட்டங்களாக மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இரு விழாக்களிலும் விஜய் பங்கேற்று, மாணவர்களுக்கு பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

இந்நிலையில், வரும் 28-ம் தேதி முதல்கட்ட விழாவில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோருக்கான அனுமதி சீட்டுகளை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேற்று வழங்கினார். 2-வது கட்ட விழாவுக்கான அனுமதி சீட்டுகளை ஓரிரு நாளில் வழங்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x