Published : 27 Apr 2024 06:30 AM
Last Updated : 27 Apr 2024 06:30 AM
விழுப்புரம்: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதிநடைபெற்றது. தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட மார்ச் 16-ம் தேதி முதல் 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் கொண்டு செல்லப்பட்டால், அவை பறக்கும்படையினரல் பறிமுதல் செய்யப் பட்டன.
அந்த வகையில் கடந்த மாதம் விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின்போது, கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த ரெஜிமோன் (53) என்பவர் தொழில்ரீதியாக காரில் புதுச்சேரி நோக்கிச்சென்றபோது, உரிய ஆவணங் களின்றி வைத்திருந்ததாக ரூ.68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவுக்கு தனது நண்பர்களுடன் ரெஜிமோன் நேற்று வந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரம் தொகைக்கான ஆவ ணங்கள் மற்றும் இதர விவரங்களை அவர் அளித்து, அத்தொகையை பெற்றுக்கொண்டார்.
இத்தொகையை பெற வந்தரெஜிமோன், தனது இரு கைகளி லும் தங்க பிரேஸ்லெட், தங்கக் காப்பு, கழுத்தில் தங்கச்சங்கிலி என சுமார் 2 கிலோ 250 கிராம்எடை கொண்ட தங்க நகைகளைஅணிந்து வந்ததால் ஆட்சியர்அலுவலகத்தில் பணியாற்றுபவர் கள் மற்றும் பொதுமக்கள் வியப் புடன் பார்த்தனர்.
இதுகுறித்து ரெஜிமோன் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தின் சிமோ காவைச் சேர்ந்த தனக்கு, சொந் தமாக காஃபி எஸ்டேட் உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருகிறேன். தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம். அதனால் தங்க நகைகளை அணிந்தவாறுதான் எப் போதும் இருப்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT