Published : 15 Apr 2024 04:08 AM
Last Updated : 15 Apr 2024 04:08 AM
மதுரை: தேனி தொகுதி அமமுக வேட் பாளர் டி.டி.வி. தினகரன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சோழவந்தான் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பொதும்பு கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். தினகரனை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 2017 முதல் 2020 வரை நடந்த பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டி.டி.வி.தினகரன். தனக்கான ஆட்சி அதிகாரத்தை அடுத்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்ட சூழ்நிலையிலும் தியாக மனப் பான்மை யோடு அதிமுக ஆட்சி தொடர காரணமாக இருந்தார் தினகரன். மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், அவர் தமிழகத்தின் அதிமுக முகமாக மாற்றப் படுவார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தினகரன் தலைமையிலான அதிமுக தமிழகத்தை வழிநடத்த உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், டி.டி.வி. தினகரன் பேசியதாவது: திமுக அரசின் கைது நடவடிக்கைக்கு பயந்து, மக்களவைத் தேர்தலில் வலுவான வேட்பாளர்களை அதிமுக சார்பில் நிறுத்தவில்லை. திமுக வெற்றி பெற வசதியாக பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். கொடநாடு கொலை வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்பதால், கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசுக்கு சாதகமாகவும், பக்கபலமாகவும் செயல்படுகிறார் பழனிசாமி. அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தை படுதோல்வி அடையச் செய்யவே அவர் பாடுபடுகிறார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT