Published : 12 Apr 2024 04:16 AM
Last Updated : 12 Apr 2024 04:16 AM
விருதுநகர்: ஸ்டாலின் கை காட்டுபவர்தான் நாட்டின் பிரதமராக ஆவார் என்று திருச்சி சிவா கூறினார்.
மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திருச்சி சிவா நேற்று முன்தினம் இரவு விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இனிமேல் ஜனநாயக ஆட்சி இருக்குமா? பாஜக ஆட்சியில் நாடா ளுமன்றத்திலேயே எங்களைப் பேச அனுமதிப்பதில்லை. பேச முயன்றால் எங்களை தூக்கி வெளியே எறிந்தார்கள். ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கி விட்டதாக பழி சுமத்தினார்கள்.
ரயில்வே துறையில் 16 லட்சம் பேர் பணியாற்றினர். தற்போது 12 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். எங்கள் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி. மோடி ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சி. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. புயல் அடித்தபோது, வெள்ளம் வந்த போது வராத மோடி, இப்போது 10-வது முறையாக தமிழகம் வருகிறார். காரணம் உங்கள் கையில் ஓட்டு உள்ளது. நீங்கள் போடும் ஓட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளை நாளைக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஓட்டு.
எனவே, அமைதிப் புரட்சியாக 19-ம் தேதி வாக்குச் சாவடிக்குச் சென்று மாணிக்கம் தாகூருக்கு வாக்களியுங்கள். மோடி கை இறங்கியிருக்கும். முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவர் நாட்டின் பிரதமராக ஆவார் என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT