Published : 01 Apr 2024 06:06 AM
Last Updated : 01 Apr 2024 06:06 AM
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் மின் தொடர் அமைப்புக் கழக மத்திய பண்டகசாலை அமைந்துள்ளது.இங்கு இன்சுலேட்டர், டிஸ்க், ஜீப்ரா, கண்டக்டர்போன்றபல கோடி மதிப்புள்ள பொருட்கள்சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு உயர் அழுத்த மின் கோபுரத்திலிருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சிலர் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் நிகழ்விடம் வந்த வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும் அலுவலக வளாகத்தில் சேமித்து வைத்திருந்த மின்சாதனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அலுவலக வளாகத்தில் உள்ள காய்ந்து போன புல் செடிகளால் அடிக்கடி இதுபோன்று தீ விபத்து ஏற்படுகிறது. புல் செடிகளை அகற்றி இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்காது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள திரிசூலம் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு,8:15 மணிக்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவெனப் பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.
வெயிலின் தாக்கம் அதிகரித்ததே தீ விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக, மலையில் உள்ளசெடி, மரங்கள் எரிந்தன. உண்மையில் வெயிலின் தாக்கத்தால் தீபற்றியதா அல்லது சமூக விரோதிகள் காரணமா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT