Published : 31 Mar 2024 07:59 AM
Last Updated : 31 Mar 2024 07:59 AM

“கேள்வி நேரத்துக்கு வராத ஒரே பிரதமர் மோடி” - ஆ.ராசா விமர்சனம்

திருப்பூர்: மக்களவையில் கேள்வி நேரத்துக்குகூட வராத ஒரே பிரதமர் மோடி என்று, ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அவிநாசியில் நேற்று நடைபெற்றது.

இதில் நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது, ‘‘ஜனநாயகத்தை காப்போம், மதச்சார்பின்மையை காப்போம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்ற ஒரே மையப் புள்ளியின் கீழ் இண்டியா கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. இது நான் சந்திக்கின்ற 8-வது தேர்தல். தற்போதைய தேர்தல் யுக்திகள், தகவல் தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. இந்த உலகத்திலேயே முதல்வரிடம் பொய் சொன்ன ஒரே பிரதமர் மோடிதான்.

மக்களவையில் கேள்வி நேரத்துக்குகூட வராத ஒரே பிரதமரும் மோடி தான். இப்படியொரு ஜனநாயக மரபுகளை மீறுகின்ற பிரதமரை நான் பார்த்ததில்லை.

மதவெறியை தூண்டி, இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ், ஒரு மொழியின் கீழ், ஒரு பண்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என துடிக்கிற இந்த ஆட்சியை எதிர்ப்பதற்கும், மோடியை எதிர்ப்பதற்கும் பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் துணிவு இல்லை. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மற்றும் சிபிஐ சோதனைகளுக்கு பயப்படாத ஒரு தலைவராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்’’ என்றார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x