Published : 22 Mar 2024 03:18 PM
Last Updated : 22 Mar 2024 03:18 PM

திமுக - அதிமுக நேருக்கு நேர் மோதல்: தி.மலை, ஆரணி தொகுதி களம் எப்படி?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக – அதிமுக நேருக்கு நேர் மோதுகிறது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக 6-வது முறையாக போட்டியிடுகிறது. 4 முறை வெற்றி (1957, 1962, 2009, 2019) பெற்றுள்ளது. ஒருமுறை தோல்வியை (2014) சந்தித்தது.

அதிமுக 3-வது முறையாக போட்டியிடுகிறது. ஒருமுறை வெற்றியும் (2014), ஒருமுறை தோல்வியை (2019) சந்தித்துள்ளது. கடந்த 2009-ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. கடந்த 1967 முதல் 2004 வரை தொகுதி சீரமைப்பில், திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தேர்தலில் 3-வது முறையாக திமுக – அதிமுக நேருக்கு நேர் மோதுகிறது. இரு கட்சிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. திமுக வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளரான, தற்போதைய மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையும், அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் தீவிர ஆதரவாளர் தென்மாத்தூர் எம்.கலிய பெருமாள் போட்டியிடுகின்றனர்.

ஆரணி மக்களவைத் தொகுதி: ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக 2-வது முறையாக போட்டியிடுகிறது. கடந்த 2014-ல் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. அதிமுக 4-வது முறையாக தொடர்ந்து போட்டியிடுகிறது. இதில், ஒரு முறை (2014) வெற்றியும், 2 முறை தோல்வியும்(2009, 2019) சந்தித்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009-ல் கிருஷ்ண சாமியும், கடந்த 2019-ல் அவரது மகன் விஷ்ணு பிரசாத்தும் வெற்றி பெற்றனர். 2014-ல் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.

இந்நிலையில், ஆரணி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், திமுக போட்டியிடுகிறது. திமுக – அதிமுக 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதில், ஒருமுறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜி.வி.கஜேந்திரன் போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளர் தேர்வில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் நகர்வு இருந்ததாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009-ல் கிருஷ்ணசாமியும், கடந்த 2019-ல் அவரது மகன் விஷ்ணு பிரசாத்தும் வெற்றி பெற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x