Published : 19 Mar 2024 05:49 AM
Last Updated : 19 Mar 2024 05:49 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர், நேற்று அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து, விஸ்வரூப தரிசனத்தில் மூலவரை வழிபட்டார்.
உலக நன்மைக்காக: பின்னர், வல்லப விநாயகர், சூரசம்ஹார மூர்த்தி சந்நிதிகளில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, மூலவருக்கு நடைபெற்ற அபிஷேகத்தை, சந்நிதி வாயிலில் அமர்ந்து தரிசனம் செய்தார். அவரது ஆதரவாளர்கள் உடன் வந்திருந்தனர்.
உலக நன்மைக்காக சுவாமிதரிசனம் செய்ததாக, செய்தியாளர்களிடம், ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT