Published : 20 Feb 2024 06:25 AM
Last Updated : 20 Feb 2024 06:25 AM

கீழடி அகழ் வைப்பகத்துக்கு ரூ.17 கோடி: தொடங்கும் 10-ம் கட்ட அகழாய்வு பணி

கீழடியில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமையவுள்ள பகுதி.

திருப்புவனம்: கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத் துக்கு ரூ.17 கோடி ஒதுக்கியதுக்கும், 10-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்குவதற்கும், அப்பகுதி மக்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு இதுவரை 9 கட்ட அகழாய் வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இதேபோல், அருகிலுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெற்றன. இங்கும் ஆயிரக்கணக்கான தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை பல லட்சம் பேர் தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அகழாய்வு நடந்த இடத்திலேயே அகழாய்வு குழிகளையும், தொல்பொருட் களையும் நேரடியாக பார்வை யிடும் வகையில், திறந்தவெளி அகழ் வைப்பகம் ஏற்படுத்தப்படும், என ஏற்கெனவே அரசு அறி வித்திருந்தது. இதற்காக அகழாய்வு நடந்த நிலங்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், சந்தை மதிப்புக்குரிய பணத்தை தர வேண்டுமென நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததால் தாமதம் ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன், ஒரு சென்ட் ரூ.1.65 லட்சம் தருவதாகக் கூறி நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

இந்நிலையில், திறந்தவெளி அகழ் வைப்பகத்துக்கு பட் ஜெட்டில் ரூ.17 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய் வுப் பணி மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. இந்த இரு அறிவிப்பையும் அப்பகுதி மக்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து கீழடி ஊராட்சித் தலைவர் வெங்கடசுப்பிரமணியன் கூறுகையில், திறந்தவெளி அகழ் வைப்பகத்துக்கும், 10-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கும் நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. விரைவிலேயே 10-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க வேண்டும். அப்போதுதான் மழைக் காலத்துக்குள் அதிகளவில் தொல்பொருட்களை கண்டறிய முடியும் என்றார்.

நில உரிமையாளர் சந்திரசேகர் என்பவர் கூறுகையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதால், நிலங் களுக்குரிய தொகையை உடனடி யாக விடுவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x