Published : 10 Feb 2024 05:56 AM
Last Updated : 10 Feb 2024 05:56 AM

சிஎம்டிஏ திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) திட்ட அனுமதிக்கான ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒற்றை சாளரமுறை அடிப்படையில் இணையவழி திட்ட அனுமதிமென்பொருளை உருவாக்கி, கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிஎம்டிஏ மனைப் பிரிவுக்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி காணொளி, திட்ட அனுமதி மென்பொருள் தடையில்லா சான்றிதழ் வழங்கும் 12 துறைகளான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொதுப்பணி, நீர்வள ஆதாரத் துறைகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், எல்காட், வனம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சிட்கோ, நெடுஞ்சாலைத் துறை, தெற்கு ரயில்வே, மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படும் திட்ட அனுமதி சேவைகள் கடந்த ஆண்டு நவ.17-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு ஒப்புதல் வழங்கும் நடைமுறையின் கீழ், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இணையவழி ஒப்புதலும் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

சிஎம்டிஏவில் உயரமான கட்டிடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதியைப் பொறுத்தவரை, சராசரியாக ஆண்டுக்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். தற்போது135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2 மடங்கு உயர்ந்துள்ளது.

அதேபோல உயரம் அல்லாத கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிக்கு 2022-ம் ஆண்டு 641 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 455 திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு 837 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 605 திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இணையவழி மூலம்பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 29 சதவீதமும், ஒப்புதல் எண்ணிக்கை 24 சதவீதமும் உயர்ந்துள்ளது.

மேலும், சிஎம்டிஏ இணையவழி திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கான மென்பொருளில் தற்போதுள்ள செயல்முறையை எளிமையாக்கரீ-இன்ஜினீயரிங் செய்ய உத்தேசித்துள்ளது. இதன்மூலம், திட்ட அனுமதிக்கான காலஅளவு 60 நாட்களில் இருந்து30 நாட்களாகவும், திட்ட அனுமதி எண்ணிக்கையும் உயரும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x