Published : 09 Feb 2024 05:06 AM
Last Updated : 09 Feb 2024 05:06 AM

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஊழியர்கள் உண்ணாவிரதம்

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்துஊழியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில், முழுநேரப் பணியாளர்களாக 1,465பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்களை கல்வித்துறையோடு இணைத்து, பணியை நிரந்தரப்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் நேற்று உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ தலைமை வகித்தார்.இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சங்கத் தலைவர் வாலன்றின் பிரிட்டோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் எங்களுக்கு குறைந்த ஊதியமே கிடைப்பதால், மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் வழங்குவதைப்போல, குறைந்தபட்ச ஊதியமாக ரூ.35 ஆயிரமாவது வழங்க முன்வர வேண்டும்.

2022-ல் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார மாநாட்டில், இடமாறுதல் கோரிக்கை தொடர்பாகமுதல்வர் ஸ்டாலின் உறுதியளித் தார். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெ டுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x