Published : 03 Feb 2024 06:25 AM
Last Updated : 03 Feb 2024 06:25 AM

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான அரசு அல்ல: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

வாணியம்பாடியில் நேற்று நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

வாணியம்பாடி: பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு அல்ல என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணா மலை தெரிவித்தார். ‘என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையை பாஜக தொடங்கி பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. இதில், தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று அவர் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து நடைபயணமாக வந்த அண்ணா மலைக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, வாணி யம்பாடி பேருந்து நிலையம் வழியாக சி.எல்.சாலையில் நடந்து சென்று அங்குள்ள வாரச்சந்தையில் பொதுமக்கள் முன்னிலையில் அண்ணாமலை பேசும்போது, ‘‘வாணியம்பாடி பகுதி வளர்ச்சி பெறாமல் உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும், நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லை. அங்குள்ள மக்கள் அவசர தேவைக்கு டோலி கட்டி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறாமல் இருக்க தமிழக ஆட்சியாளர்களே காரணம்.

அதேபோல, நியூடவுன் ரயில்வே ‘கேட்' பிரச்சினையும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக அரசு பாலம் கட்ட இடத்தை தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள கிராமப்புற சாலைகளை சீரமைக்க மத்திய அரசு 5,886 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் எந்த சாலையும் சீரமைக் கப்படவில்லை.

தோல் தொழிற்சாலைகளால் பாலாறு மாசடைந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் போனால் பாலாறு இருக்காது. தமிழகத்தில் பாலாறு போல 6 நதிகள் மாசு டைந்து காணப்படுகிறது. அதில், முதலிடத்தில் பாலாறு உள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது. பாலாற்றை பாது காக்க வேண்டும். பாலாறு மட்டும் அல்ல சுற்றுச்சூழல், நீர்நிலை களையும் பாதுகாக்க வேண்டும். அதை பாஜக அரசு செய்யும்.

வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக் கின்றனர். பாஜக அரசு சிறுபான் மையினருக்கு எதிரான அரசு அல்ல. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வேலைவாய்ப்பில் நான் கரை சதவீதமாக இருந்த சிறு பான்மையினர் 2024-ல் 10.5 சதவீதமாக மாறியுள்ளனர். இப் போது சொல்லுங்கள் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசா? சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு என்றும் துணை நிற்கும்.

இந்த தொகுதி யின் எம்.பி.யாக உள்ள கதிர்ஆனந்த் இதுவரை என்ன செய்துள்ளார். அவர் நடத்தும் கல்வி நிறு வனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளை மாண வர்களுக்கு கற்றுக் கொடுக் கின்றனர். ஆனால், வெளியே இரு மொழி கொள்கை என பேசு கின்றனர்.

திமுகவினர் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் லட்சக்கணக்கில் கல்விக்கட்டணம் பெற்றுக் கொண்டு 3 மொழிகளை கற்றுக் கொடுக்கின்றனர். அரசு பள்ளி களில் இரு மொழி மட்டுமே உள்ளது. ஏன்? அரசு பள்ளிகளில் 3 மொழிகள் கொண்டு வர மறுக் கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 மொழிகள் கற்பிக் கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x