Published : 21 Jan 2024 08:37 AM
Last Updated : 21 Jan 2024 08:37 AM

ரயில் மேம்பாலம் சரிந்து விழுந்த இடத்தில் ‘சென்னை ஐஐடி’ விரைவில் ஆய்வு

சென்னை: ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் ரயில் மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் சென்னை ஐஐடி குழு விரை வில் ஆய்வு நடத்த உள்ளது.

சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ. தொலைவுக்கு மேம்பால ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கி மலை ரயில் நிலையம் வரை 500 மீட்டர் தொலைவை இணைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பாதையில், அடுத்த சில மாதங்களில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவையை தொடங்கரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தில்லைகங்கா நகர் உள்வட்ட சாலையில்157 மற்றும் 158-வது தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதி பாரம் தாங்காமல் கடந்த 18-ம் தேதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் பகுதியில் சென்னை ஐஐடி பேராசிரியர் குழு விரைவில் ஆய்வு நடத்தஉள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறிய தாவது:

மீண்டும் பயன்படுத்தலாமா? ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் பாலம் அமைக்கும்போது, இரு தூண்களுக்கு இடையே 80அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. சென்னை ஐஐடி பேராசிரியர்கள் குழு விரைவில் இங்கு ஆய்வு நடத்த உள்ளது. சரிந்து விழுந்த பாலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்ய உள் ளனர். இதுதவிர, இத்தடத்தில் மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில், வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று, அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். இந்தபாதையில் 36 இரும்பு பாலங்கள் (கர்டர்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுதான் தற்போது சரிந்து விழுந்துள்ளது.

ஏற்கெனவே, திட்டமிடப்படி ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் - பரங்கிமலை வரையிலான ரயில்வே தடத்தில் மேம்பாலப் பணிகளை மார்ச்சுக்குள் முடித்து, ஏப்ரலில் பயன்பாட்டுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x