Published : 12 Jan 2024 05:30 AM
Last Updated : 12 Jan 2024 05:30 AM
மதுரை: மதுரை துணை மேயர் வீடு மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரை துணை மேயர் தி.நாகராஜனின் வீடு, அலுவலகத்தை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப் பதிந்து 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜெய் ஹிந்த்புரத்திலுள்ள துணை மேயர் நாகராஜனின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை துணை மேயர் தி.நாகராஜனை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சமூக விரோதிகளின் செயல் பாடுகளுக்குப் பின்னால் காவல்துறையும் கைகோத்தி ருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. துணை மேயர் மனைவி சம்பவம் நடந்தவுடன் காவல் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தபோதும் அவர் ஆலோசனை கூட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
இதில் தொடர்புடைய அனை வரையும் கைது செய்ய வேண்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எம்பி மற்றும் கட்சியினர் சேர்ந்து வலுவான போராட்டத்துக்குப் பின்தான் வழக்கு பதியப் பட்டுள்ளது.
ஒவ்வொன்றுக்கும் போராடி போராடித்தான் செய்ய வேண் டும் என்றால் பிறகு எதற்கு காவல்துறை. ஏதோ 4 பேர் சேர்ந்து ரவுடித்தனம் செய்தததாகத் தெரியவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது எம்பி சு.வெங்கடேசன் மற்றும் நிர் வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT