Published : 06 Jan 2024 05:51 AM
Last Updated : 06 Jan 2024 05:51 AM
சென்னை: கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 15 தேர்வுகளுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: 5,777 பணியிடங்களுக்கு சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும். முன்பை 248 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், குரூப்-1ஏ சேவைகளில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இந்த மாதத்துக்குள் வெளியிடப்படும்.
இதேபோல், 95 குரூப் 1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, 11 மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்துத் தேர்வு, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவன ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வக இளநிலை ஆய்வாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT