Published : 04 Jan 2024 05:44 AM
Last Updated : 04 Jan 2024 05:44 AM

ஈரோடு, நாமக்கல், கோவையில் வருமான வரி சோதனை

ஈரோடு/நாமக்கல்/கோவை: வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின்பேரில், ஈரோடு, நாமக்கல், கோவையில் உள்ள ரியல் எஸ்டேட் தொடர்பான நிறுவனங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமியின் கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நாமக்கல் முல்லை நகரில் சத்தியமூர்த்தி என்பவரது வீடுமற்றும் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில், சென்னை, நாமக்கல்லில் உள்ளசத்தியமூர்த்தியின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல, கோவை காளப்பட்டியில் கட்டுமான நிறுவனஉரிமையாளர்கள் சதாசிவம், பாலசுப்பிரமணியம் ஆகியோரது அலுவலகம், பட்டணம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட்உரிமையாளர் ராமநாதன் வீடு,சூலூரில் உள்ள அவரது மகன்சொர்ணகார்த்திக் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x