Published : 30 Dec 2023 06:10 AM
Last Updated : 30 Dec 2023 06:10 AM

சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1-க்கு ஐஎஸ்ஓ 9001 மற்றும் 14001 தரச் சான்று

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1-க்கு சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஐஎஸ்ஓ 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக்கிடம் பீரோ வெரிடாஸ் (Bureau Veritas) நிறுவனத்தின் சார்பாக அதன் மேலாளர் வின்ஸ்டன் ஐசக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் வழங்கினார்.

இது தொடர்பாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சென்னை மெட்ரோ ரயில்நிறுவன பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 2,361 பேருக்கு ஐஎஸ்ஓ விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎஸ்ஓ சான்றிதழ்,சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1 நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடத்தில் உள்ள உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைமெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x