Published : 30 Dec 2023 05:21 AM
Last Updated : 30 Dec 2023 05:21 AM

ரூ.15,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை

பிரதமர் மோடி | கோப்புப்படம்

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளார். ரூ.15,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து லக்னோ மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறியதாவது:

பிரதமரின் வருகைக்கு முன்னதாக பிரதமரின் பாதுகாப்புக்காக உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்), தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) மற்றும் பிறபாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த,போக்குவரத்து திசை திருப்பும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் காவல் துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமரின் வருகையை முன்னிட்டு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அயோத்தியில் கடந்த 3 நாட்கள் முகாமிட்டு முன்னேற்பாடுகளை கவனித்து வருகிறார்.

அயோத்தியில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையவுள்ள அயோத்திதாம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

பிரதமர் தனது வருகையின் போது தர்பாங்கா-அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மால்டா டவுன்-சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் (பெங்களூரு) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

கூடுதலாக, 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் இந்த நிகழ்ச்சியின்போது கொடியசைத்து தொடங்கி வைக்கப்படவுள்ளன. இது நாட்டின் ரயில்நெட்வொர்க்குக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அயோத்தி-ஆனந்த் விஹார் முனையம், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி, அமிர்தசரஸ்-டெல்லி, கோயம்புத்தூர் - பெங்களூரு கன்டோன்மென்ட், மங்களூர்-மட்கான் மற்றும் ஜல்னா-மும்பை போன்ற வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயங்கும்.

வளர்ச்சி திட்டங்கள்: மேலும் புதிதாக கட்டப்பட்டஅயோத்தி விமான நிலையத்தையும் பிரதமர் மோடி, திறந்து வைப்பார். மொத்தம் ரூ.15,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பலவளர்ச்சித் திட்டங்களை அப்போதுஅவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் உத்தர பிரதேசம் முழுவதும் உள்ள பிற திட்டங்கள் தொடர்பான சுமார் ரூ.4,600 கோடி மதிப்புள்ள திட்டங்கள் இதில் அடங்கும்.

மேலும் அயோத்தியில் நயா படித்துறை முதல் லஷ்மண் படித்துறை வரை உள்ள சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், அழகு படுத்துதல், தீபோத்சவ் போன்ற நிகழ்வுகளுக்கு பார்வையாளர் மாடங்கள் கட்டுதல் மற்றும் ராம் கி பைடி முதல் ராஜ் காட், ராஜ் காட் முதல் ராமர் கோயில் வரையிலான பக்தர்கள் செல்லும் பாதையை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை-28ன் லக்னோ-அயோத்தி பிரிவு (புதிய என்.எச் -27), தற்போதுள்ள அயோத்தி புறவழிச்சாலையை மாற்றியமைத்தல், சிப்பெட் மையத்தை நிறுவுதல், மாநகராட்சி அயோத்தி மற்றும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திற்கான அலுவலகங்களைக் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங் களுக்கும் பிரதமர் மோடி அப்போது அடிக்கல் நாட்டவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வந்து செல்லும் வரை, நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகளை போலீஸார் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x