Published : 01 Dec 2023 05:55 AM
Last Updated : 01 Dec 2023 05:55 AM

நீலகிரி நாடுகாணியில் ராகுல் காந்திக்கு வரவேற்பு

கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வயநாடு மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக நேற்று காரில் சென்றார். நீலகிரி மாவட்டம் நாடுகாணி, பந்தலூர், சேரம்பாடி வழியாக அவர் சென்றார்.

அப்போது அங்கு அவரை வரவேற்ற குழந்தைகள் ‘ராகுல்ஜி, ராகுல்ஜி’ என்று சப்தமிட்டு அழைத்தனர். இதைக்கேட்ட ராகுல் காந்தி காரை நிறுத்தி கீழே இறங்கினார்.

தொடர்ந்து, ஏராளமான குழந்தைகள் ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

மேலும், கட்சி நிர்வாகிகளும் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்த கட்சிநிர்வாகிகளுடன் கைகுலுக்கிவிட்டு, வயநாடு பகுதிக்கு ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x