Published : 24 Nov 2023 09:28 AM
Last Updated : 24 Nov 2023 09:28 AM

நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x