Published : 27 Oct 2023 05:21 AM
Last Updated : 27 Oct 2023 05:21 AM
ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 14-ம் தேதி,கென்னடி மற்றும் பாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். மேலும், இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீனவர்களின் காவல் முடிவடைந்ததையடுத்து நேற்று மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 15 பேருக்கும் 2-வது முறையாக நவ. 9-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT