Published : 21 Oct 2023 09:02 AM
Last Updated : 21 Oct 2023 09:02 AM

பிரசார பயணம், பேரணிக்கு அனுமதி கோரி மார்க்சிஸ்ட் வழக்கு: போலீஸார் முடிவெடுக்க உத்தரவு

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரசார பயணம், பேரணிக்கு அனுமதி கோரி மார்க்சிஸ்ட் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உள்ளூர் போலீஸார் இது தொடர்பாக 7 நாட்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-ம் ஆண்டை முன்னிட்டு மத்திய அரசின் மதவாதக் கொள்கைகளைக் கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக். 21-ம் தேதி (இன்று) முதல் வரும் அக். 30 வரை பிரசாரப் பயணங்கள் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டிஜிபி-க்கு கடந்த 10-ம் தேதி மனு அளித்தோம். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே பேரணி மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக உள்ளூர் போலீஸாரிடம் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவ்வாறு அளிக்கப்படும் மனுவை போலீஸார் பரிசீலித்து 7 நாட்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை அனுமதி வழங்கக்கோரும் தேதியில் உரிய பாதுகாப்பு வழங்குவதில் ஏதாவது இடையூறுகள் இருந்தால் மாற்று தேதிகளில் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x