Published : 02 Oct 2023 07:41 AM
Last Updated : 02 Oct 2023 07:41 AM

சென்னையில் தூய்மைப் பணி: மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு

கோப்புப்படம்

சென்னை: தூய்மை இந்திய திட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னை,வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தூய்மைப் பணியை, வருமான வரி தலைமை ஆணையர் (வரிப்பிடித்தம்) ராஜசேகர் ரெட்டி லக்காடி, ஆணையர் எம்.முரளி, இணை ஆணையர் எம்.அர்ஜுன் மாணிக் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மாணவர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இதில், கோயில் தக்கார் ஆதிமூலம், மாமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதி, மேற்கு தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம், முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு ரங்கநாதன் தோட்டம், மங்கல் ஏரி ஆகிய பகுதிகளில் மத்திய கூடுதல் பிஎப் ஆணையர் பங்கஜ் அறிவுறுத்தலின்பேரில் 400-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை, ஹாடோஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் வெளிநாட்டு வர்த்தக (சென்னை) கூடுதல் தலைமை இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், இணை தலைமை இயக்குநர் எப்.டி.இனிதா உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை துறைமுக வளாகத்தில் துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். மெரினா கடற்கரையில் இந்திய உணவு கழக அதிகாரிகள், மாநிலக்கல்லூரி, புதுக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

ஐசிஎஃப் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியை பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தொடங்கி வைத்தார். இதில், தலைமை இயந்திரவியல் பொறியாளர் னிவாஸ், தலைமைப் பணியாளர் நல அலுவலர் மோகன் ராஜா, தலைமை நிதித்துறை அதிகாரி கருணாகரமேனன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், ஐசிஎஃப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) இயக்குநர், பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனர்.

பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் சென்னை ஐஐடி மாணவர்கள், ஆசிரியர்கள் என 150 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக பாஜக சார்பில் சிட்கோ நகரில் நடைபெற்ற தூய்மைப் பணியில் கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்டத் தலைவர் என்.தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளில் மரம் நடுதல் போன்ற சமூக நல பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x